TNPSC Thervupettagam

புதிய புவிசார் குறியீடுகள்

December 18 , 2022 709 days 695 0
  • அசாம் மாநிலத்தின் கமோச்சா, தெலுங்கானாவின் தந்தூர் துவரை, லடாக்கின் ராக்ட்சே கார்போ வாதுமைப் பழம் மற்றும் மகாராஷ்டிராவின் அலிபாக் வெள்ளை வெங்காயம் உட்பட ஒன்பது புதியப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டு உள்ளது.
  • கேரளாவின் வேளாண் பொருட்களுக்கு ஐந்து புவிசார் குறியீடுகள் வழங்கப் பட்டு உள்ளன.
  • இத்துடன் இந்தியாவில் உள்ள புவிசார் குறியீடுகள் பெற்றப் பொருட்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.
  • புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்களை அதிகளவில் கொண்டுள்ள முதல் ஐந்து மாநிலங்கள் கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகியனவாகும்.
  • இவற்றில் 401 இந்திய நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டத் தயாரிப்புகளாக உள்ள நிலையில், அதில் 31 வெளிநாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட தயாரிப்புகளாகும்.
  • கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை புவிசார் குறியீடுகளை அதிகளவில் கொண்ட மாநிலங்களாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கேரளா (35), உத்தரப் பிரதேசம் (34), மற்றும் மகாராஷ்டிரா (31) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்