தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் அக்டோபர் 10, 2018 அன்று 471 பேருந்துகளை புதிதாக துவங்கி வைத்தார்.
கழிப்பறை வசதிகளுடன் கூடிய, மித படுக்கை வசதி (Semi-Sleeper) இருக்கைகளைக் கொண்ட 8 பேருந்துகள் சென்னை- கரூர் - கோயம்புத்தூர், சென்னை - சேலம், சென்னை - திருச்சி மற்றும் சென்னை - தஞ்சாவூர் ஆகிய வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இவர், பெருநகர வளர்ச்சி ஆணையத்தால் கட்டப்பட்ட மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.