TNPSC Thervupettagam

புதிய மருந்துகள் மற்றும் மருத்துவச் சோதனை விதிகள் (2023)

July 6 , 2023 383 days 196 0
  • இந்திய அரசானது, சமீபத்தில் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவச் சோதனை விதிகளில் (2023) ஒரு திருத்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • இது ஆராய்ச்சியில், குறிப்பாக மருந்துச் சோதனையில் விலங்குகளை ஈடுபடுத்தும் ஒரு நடைமுறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திருத்தமானது, ஆராய்ச்சியாளர்களை விலங்குகளுக்குப் பதிலாக விலங்குகள் அல்லாத மற்றும் மனிதர்கள் தொடர்பான செயல்முறைகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கிறது.
  • புதிய மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைச் சோதிப்பதற்கான பல்வேறு முப்பரிமாண உறுப்போலிகள், மனித செல்கள் உள்ளிடப்பட்டச் சில்லுகள் மற்றும் பல்வேறு மேம்படுத்தப் பட்ட கணக்கீட்டு முறைகள் போன்ற தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும்.
  • உடலின் குறிப்பிட்ட பல்வேறு உறுப்புகளைப் பிரதிபலிக்கும் வகையிலான மில்லி மீட்டர் அளவிலான முப்பரிமாண செல் கட்டமைப்புகள் “உறுப்போலிகள்” அல்லது “சிறிய உறுப்புகள்” என்று அழைக்கப்படுகின்றன.
  • “மனிதச் செல்கள் உள்ளிடப்பட்ட சில்லுகள்” என்பது உடலின் உள்ளே நிகழும் இரத்த ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நுண்ணிய நாளங்களுடன் இணைக்கப்பட்ட மனிதச் செல்கள் உள்ளீடு செய்யப்பட்ட AA-மின்கலன் அளவிலான சில்லுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்