TNPSC Thervupettagam

புதிய மாசுபாடு - முன்னறிவிப்பு

April 28 , 2018 2403 days 790 0
  • குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு முன்கூட்டியே சுற்றுப்புறத்தில் பரவி காணப்படுகின்ற நுண் மாசு பொருட்களின் (particulate matter -PM) எதிர்ப்பார்க்கபடும் அளவினை அறிய உதவும் மாசு முன்னறிவிப்பு அமைப்பினை  (pollution-forecast system)  உருவாக்க இந்தியா,  அமெரிக்கா மற்றும் பின்லாந்துடன் கூட்டிணைந்துள்ளது.
  • இந்த செயல்முறையை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences - MoES)  ஒருங்கிணைக்க உள்ளது.
  • அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு  (National Oceanic and Atmospheric Administration - NOAA) மற்றும் பின்னிஸ்  வானியல் நிறுவனத்தின் (Finnish Meteorological Institute)  நிபுணத்துவத்துடன் கூட்டிணைந்து இந்த அமைப்பு உருவாக்கப்படும்.
  • தற்போது நடப்பில் காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பானது (System of Air Quality and Weather Forecasting and Research -SAFAR) புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல நிறுவனத்தால் (Indian Institute of Tropical Meteorology) நிர்வகிக்கப்படுகின்றது.
  • இந்த நிறுவனமானது டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் காணப்படும் மாசுபாட்டுப் போக்கினை (pollution trends) தெரிவிக்கின்ற முதன்மை முன்னறிவிப்பு  (apex forecaster) அமைப்பாகும்.
  • இந்தியாவில் காற்றுத் தர கண்காணிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய தூய காற்றுத் திட்டத்தின் (National Clean Air Programme-NCAP) வரைவை மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்