புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த நான்கு மாநகராட்சிகளுடன் தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 அண்டை கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து புதுக்கோட்டை மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 அண்டை கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து புதிய திருவண்ணாமலை மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி மற்றும் 12 அண்டை கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து புதிய நாமக்கல் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள் மற்றும் ஐந்து கிராமப் பஞ்சாயத்துகள் சேர்த்து காரைக்குடி மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்தப் புதிய மாநகராட்சிகள் நிறுவப் பட்டு உள்ளன.
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்., என்பதோடு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் நகர்ப்புற மக்கள் தொகை 48.45% ஆக உள்ளது.
தற்போது இம்மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகை 53% ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.