ஜெர்மனியின் பெர்லினில், கென்யாவைச் சேர்ந்த எலியட் கிப்சோஜ் தனது முந்தைய சாதனையான 2 மணிநேரம் 1 நிமிடம் 39 வினாடியை முறியடித்து புதிய மாராத்தான் உலக சாதனையைப் படைத்தார்.
33 வயதுடைய ஒலிம்பிக் சாம்பியனான இவர் 4 வருடங்களுக்கு முன்னர் டென்னீஸ் கிமெட்டோவால் கடக்கப்பட்ட நேரத்தை விட 1 நிமிடம் 17 வினாடி முன்னரே கடந்துள்ளார்.
எத்தியோப்பியாவின் ருடி அகா இரண்டாவது இடத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த திருனேஷ் டிபாபா மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.