2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
இது பொது மற்றும் தனியார் மின்னேற்ற நிலையங்கள் மற்றும் மின்கல மாற்று நிலையங்களை நிறுவுவதற்கான மூலதனத்திற்கு மானியங்களை வழங்குகிறது.
இது மறுசீரமைப்பு மற்றும் மறு உற்பத்தி ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சிறப்புத் தேவை சார்புச் சலுகைகளைக் குறிப்பிடுகிறது.
மாநிலத்தில் இயங்கி வரும் பொது மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகளை மின் மயமாக்குவதற்கான செயல்திட்டத்தினை அரசாங்கமானது படிப்படியாக உருவாக்க உள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் மின்சாரப் பேருந்துகளின் பங்கினை [மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும்] 30% ஆக அதிகரிக்க அரசு பல முயற்சிகளை மேற் கொள்ளும்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சாலை வரி, பதிவுக் கட்டணங்கள் மற்றும் அனுமதிக் கட்டணங்கள் ஆகியவற்றினைத் தள்ளுபடி செய்வதற்கு 2019 ஆம் ஆண்டு கொள்கை அனுமதி வழங்கியது.
ஆனால், சமீபத்தியக் கொள்கையானது அவற்றை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து, மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் சிறப்புத் தேவைச் சார்புச் சலுகைகளை வழங்குகிறது.
இருப்பினும், இந்த சலுகைகள் ஆனது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட, விற்பனை செய்யப் பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1.15 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 93% வணிகப் பயன்பாடு சாராத வாகனங்களாகும்.