2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01-ம் தேதி முதல் இந்தியாவின் புதிய மின்னணு வர்த்தகக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஒரு புதிய வகை கொள்கை விதிமுறைகள் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது அந்நிறுவனங்களுக்கு அரசின் மாற்றியமைக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு (foreign direct investment) விதிமுறைகளோடு தங்களைப் பொருத்திக் கொள்ளும் வகையில் 60 நாட்கள் அவகாச காலத்தை வழங்கியிருக்கின்றது.
புதிய கொள்கையின் சிறப்பம்சங்கள்
நேரடி ஆன்லைன் சில்லறை வர்த்தகர்கள் அவர்கள் பங்கு வைத்திருக்கும் விற்பனையாளர்கள் வழியாக பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை.
மேலும் தங்களது விற்பனை நடைமுறைகளில் மட்டுமே பொருட்களை விற்பனை செய்வதற்காக அந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களுடன் ஆன்லைன் விற்பனையாளர்கள் சிறப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் தடை.
அனைத்து ஆன்லைன் சில்லறை வர்த்தகர்களும் தங்களது இணையதளத்தில் அனைத்து விற்பனையாளர்களையும் அவர்களது பொருட்களையும் விற்பதற்கு வழிவகை செய்யும் வகையில் ஒரு சரிசமமான நடைமுறையை நிர்வகிக்கக் கேட்டுக் கொள்ளப்படுவர்.
இது இணையதள வர்த்தக வியாபாரிகள் விற்பனையாளர்களின் சரக்குக் கையிருப்பை கட்டுப்படுத்துவதைத் தடை செய்கின்றது.
இது மிக அதிகமான தள்ளுபடிகளைத் தடுக்கும் நோக்கில் சந்தைகள் பொருட்களின் விலைகள் மீது தாக்கம் ஏற்படுத்துவதைத் தடுக்கின்றது.