TNPSC Thervupettagam

புதிய யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம்

September 19 , 2023 432 days 309 0
  • யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரியக் குழுவின் 45வது அமர்வு ஆனது இந்தியாவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் நிறுவப்பட்ட விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அமைந்த மேற்கு வங்காளத்தில் உள்ள புகழ்பெற்ற இடமான சாந்திநிகேதன் யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
  • கர்நாடகாவில் உள்ள பேலூர், ஹளபேடு மற்றும் சோம்நாத்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஹொய்சாளர் கோவில்கள் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஹொய்சாளர் காலக் கோயில்கள் உயர்த்தப்பட்ட மேடையின் மீது நட்சத்திர வடிவக் கட்டமைப்பினால் கட்டமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கட்டிடக்கலைப் பாணிக்கு புகழ் பெற்றவை.
  • இந்தக் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பாறை வகையானது சவர்க்காரக்கல் எனப்படும் கோலோரிடிக் ஸ்கிஸ்ட் (பாசிக உப்புக் கலந்த மடிப்புப் பாறை வகை) ஆகும் என்பதோடு மேலும் இது செதுக்குவதற்கு இணக்கமான ஒரு மென்மையான பாறையாகும்.
  • இது உலகப் பாரம்பரியச் சின்னத்தைப் பெற்ற இந்தியாவின் 42வது தளமும், கர்நாடகாவில் நான்காவது தளமும் ஆகும்.
  • முன்னதாக, ஹம்பி (1986) மற்றும் பட்டாடகல் (1987) ஆகிய இடங்களில் உள்ள கர்நாடகாவின் இரண்டு நினைவுச் சின்னங்களின் குழுக்கள் மற்றும் முக்கியப் பல்லுயிரப் பெருக்கப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைகள் (2012) ஆகியவை இந்த மதிப்புமிக்க அந்தஸ்தைப் பெற்றன.
  • ஹொய்சாள ஆட்சியாளர்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை ஹளபேடுவை (துவாரசமுத்திரம்) தலைநகராகக் கொண்டு தென்னிந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்தனர்.
  • இந்த வெற்றிகரமான நியமனத்தின் மூலம், இந்தியா ஒட்டு மொத்தமாக 42 உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்டுள்ளது.
  • இதில் பண்பாட்டுப் பிரிவில் 34, இயற்கைப் பிரிவில் ஏழு மற்றும் ஒரு கலப்பு தளம் ஆகியவை அடங்கும்.
  • தற்போது, உலகில் அதிக எண்ணிக்கையிலான (யுனெஸ்கோ) தளங்களைக் கொண்ட ஆறாவது நாடாக இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்