TNPSC Thervupettagam

புதிய ரூ.200 நோட்டு வெளியீடு

August 25 , 2017 2502 days 1008 0
  • இந்திய ரிசர்வ் வங்கி முதல் முறையாக, 200 ரூபாய் நோட்டை (ஆக.25) வெளியிட்டது. இதனால், குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடர்மஞ்சள் நிறத்தில் வெளியாகும் இந்தப் புதிய ரூபாய் நோட்டு, 66 மி.மீ. *146 மி.மீ. என்ற அளவில் இருக்கும். நோட்டின் மையப் பகுதியில் மகாத்மா காந்தியின் உருவமும், அதன் அருகில் மாறும் வண்ணத்தில் 200 என்று எண்ணிலும் அச்சிடப்பட்டிருக்கும்.
  • இதுதவிர, பார்வையற்றவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பெரிதாகும் எண்கள், அசோகச் சக்கர முத்திரை, இரண்டு ஓரங்களிலும் நான்குகோடுகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
  • நோட்டின் பின்புறத்தில், தூய்மை இந்தியா வாசகம் மற்றும் சின்னம், இந்திய பாரம்பரிய கலாசாரத்தைப் போற்றும் சாஞ்சி ஸ்தூபியின் உருவம் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும்.
  • உயர்மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்ட பிறகு, புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இதனால், பணப்புழக்கம் குறைந்ததுடன் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்