TNPSC Thervupettagam

புதிய லாங்யா ஹெனிபாவைரஸ்

August 13 , 2022 839 days 492 0
  • லாங்யா ஹெனிபாவைரஸ் என்ற புதிய வைரஸ் பாதிப்பானது சீனாவில் அதிகாரப் பூர்வமாகக் கண்டறியப்பட்டது.
  • இது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் ஷான்டாங் மற்றும் ஹெனான் ஆகிய வட கிழக்கு மாகாணங்களில் கண்டறியப்பட்டது.
  • இந்த வைரஸ் ஆனது விலங்குவழித் தொற்று எனப்படும் ஒரு செயல்பாட்டின் மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது
  • லாங்யா என்பது எதிர்மறையான அமைப்பு நிலையுடன் ஒற்றை இழைக் கொண்ட RNA மரபணுவைக் கொண்டுள்ள ஹெனிபா வைரஸ் இனத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடும் என்பதோடு உயிரிப் பாதுகாப்பு நிலை 4 என்ற வைரஸ் வகைப்பாட்டை இது கொண்டுள்ளது.
  • இது 40 முதல் 75 சதவீதம் வரையில் உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்