TNPSC Thervupettagam

புதிய வகை ஆழ்கடல் மீன் இனங்கள்

October 30 , 2022 630 days 333 0
  • அட்டகாமா அகழியில் புதிய வகை ஆழ்கடல் மீன் இனங்களை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
  • அவர்கள் மூன்று வகையான ஆழ்கடல் நத்தை மீன்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ள நிலையில் அவற்றுள் ஒரு வகை இதுவரை அறிவியல் துறைக்கே அறிமுகமாகாத மீன் வகையாகும்.
  • 6,000 முதல் 7,000 மீட்டர் ஆழத்தில் பாராலிபாரிஸ் செல்டி என பெயரிடப்பட்ட புதிய இனமானது கண்டுபிடிக்கப்பட்டது.
  • பெரிய கண்கள் மற்றும் தனித்துவமான நிறம் கொண்ட இது ஆழமற்ற நீரில் வாழும் நத்தை மீனை ஒத்துள்ளது.
  • இது பரலிபாரிஸ் இனத்தைச் சேர்ந்தது.
  • இந்த இனத்தினைச் சேர்ந்த மீன் இனங்கள் பெரும்பாலும் அண்டார்டிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் காணப் படுவதோடு அது அரிதாகவே 2,000 மீட்டர் ஆழத்திற்குக் கீழ் காணப் படுகின்றன.
  • பாராலிபாரிஸ் இனம் ஆழ்கடல் மண்டலத்தில் பதிவானது இதுவே முதல் முறையாகும்.
  • அட்டகாமா பாலைவனத்தில் வாழும் பழங்குடியினரின் குன்சா மொழியில் பராலிபரிஸ் செல்தி என்ற பெயருக்கு நீலம் என்று பொருள்படும்.
  • இந்தப் புதிய இனமானது தெற்குப் பெருங்கடலின் குளிர்ந்த பகுதிக்கு ஏற்ற வகையிலான இனத்திலிருந்து உருவாகியுள்ளது.
  • இவற்றின் கண்டுபிடிப்பானது, குளிர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்த ஏற்பு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு குறித்த புதிய கேள்விகளை முன் வைக்கிறது.
  • அடகாமா அகழி அல்லது பெரு-சிலி அகழி என்பது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பெரு மற்றும் சிலி கடற்கரையிலிருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கடல் அகழி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்