இந்தியக் கடல் பகுதியில் இரண்டு புதிய வகை மீன் வகைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுவரையில் அறிவியலுக்குத் தெரியாத மற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனங்களில் ஒன்றிற்கு அரேபியக் குருவி வஞ்சிரம் மீன் (ஸ்கோம்பெரோமொராஸ் அவிரோஸ்டிரஸ்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
கண்ணாடி செதில் கொண்ட வஞ்சிரம் மீனை (ஸ்கோம்பெரோமொராஸ் லியோபார்டாஸ்) ஒரு தனித்துவமான இனமாக வெற்றிகரமாக மீட்டெடுத்தது அந்தக் குழுவின் இரண்டாவது சாதனையாகும்.
முன்னதாக, இது செதில் கொண்ட வஞ்சிரம் மீனைப் போலவே இருப்பதாக நம்பப் பட்டது.
வஞ்சிரம் மீன்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற நிலையில் இந்த பெரும் கண்டுபிடிப்பு கடல் மீன்வளத் துறையில் ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.