TNPSC Thervupettagam

புதிய வடிவம் - ஸ்கூடாய்டு (Scutoid)

August 1 , 2018 2179 days 672 0
  • மேற்புறச் செல்களின் (Epithelial cells) ஆய்வின் போது ஸ்கூடாய்டு எனப்படும் புதிய வடிவத்தினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மேற்புற திசுக்கள் உடலின் பாதுகாப்பு கேடயமாக இயங்கும் மனித உடலை அமைக்கும் 4 வகையான திசுக்களில் ஒன்றாகும். இந்தப் பாதுகாப்பு கேடயம் மனித உடலின் இரத்த நாளங்கள் மற்றும் உறுப்புகளின் சுவர்களில் புறணியாக உள்ளன.
  • ஸ்கூடாய்டு வடிவம் இறுதிப்பகுதியில் நான்கு பக்கங்களையும் மற்ற பகுதிகளில் 6 பக்கங்களையும் கொண்டுள்ளது. அதன் நீள்இறுதியின் ஒரு பகுதியில் முக்கோண மேற்பரப்பினையும் கொண்டுள்ளது.
  • இது வடிவியலுக்கு முற்றிலும் புதிதாகும். மேலும் மேலிருந்து கீழான பார்வையில் வண்டுகளின் வெளியுறையினை (கேடயம் போன்ற அமைப்பு) ஒத்துள்ளது.
  • திசுக்கள் மற்றும் உறுப்புகள் உருவாவது போல மேற்புற செல்களும் ஒன்றாக பிழிந்து, திருகி, வளைந்து ஸ்கூடாய்டு வடிவத்தின் அதிக ஆற்றலுடைய மற்றும் கடின முப்பரிமாண அமைப்பினை உருவாக்குகிறது.
  • இந்தக் கடின வடிவம் நுண்ணுயிரிகளை நமது உடலின் தோல் (அ) உறுப்புகளினுள் நுழைவதிலிருந்து தடுக்கிறது. இது கட்டமைப்பினை நிலையாகவும் ஆற்றலுடைய திறன் வாய்ந்ததாகவும் ஆக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்