TNPSC Thervupettagam

புதிய வருமான வரி சட்டம்

November 23 , 2017 2587 days 969 0
  • 1961-ன் வருமான வரிச்சட்டத்தினை மறு ஆய்வு செய்யவும், நாட்டின் நடப்பு பொருளாதார தேவைகளுக்கு இசைந்தமையும் வகையில் புதிய வருமான வரிச்சட்டத்திற்கான வரைவை (draft) உருவாக்கவும் புதிய சிறப்பு குழுவை ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் அமைத்துள்ளது.
  • மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய (CBDT – Central Board of Direct Tax) உறுப்பினர் அரவிந்த் மோடி 6 பேருடைய இக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக (Convener) செயல்படுவார்.
  • மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் இக்குழுவின் நிரந்தரப் பிரதிநிதியாக (Permanent Special Invitee). நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தச் சிறப்புக் குழுவானது 6 மாத அவகாசத்திற்குள் அரசிடம் தனது வரைவு அறிக்கையை அளிக்க உள்ளது.
  • பல்வேறு சர்வதேச நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் வரி விதிப்பு முறைகளை ஆய்வு செய்தும், நாட்டின் பொருளாதார தேவைகள், தனிநபரின் வருமான விபரங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச நாடுகளின் வரிவிதிப்பு சிறப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும் புதிய நேரடி வரி விதிப்பு கொள்கைகளை வகுக்க இக்குழுவிற்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்