TNPSC Thervupettagam

புதிய வளங்காப்பகங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள்

June 12 , 2022 771 days 441 0
  • மகாராஷ்டிரா மாநில வனவிலங்கு வாரியம் ஆனது, சமீபத்தில் 12 புதிய வளங் காப்பகங்கள் மற்றும் 3 வனவிலங்கு சரணாலயங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதுவரை, மகாராஷ்டிராவில் 15 வளங்காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • புதிய சேர்க்கைகளுடன், இந்த எண்ணிக்கை ஆனது 27 ஆக உயரும்.
  • 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்ட விதிகளின்படி, மாநிலத்தில் புதிதாக ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அறிவிப்பதற்கு வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் தேவை ஆகும்.
  • இந்த ஒப்புதலுடன், மாநிலத்தில் 3 புதிய வனவிலங்கு சரணாலயங்கள் அமைய உள்ளன.
    • லோனார் வனவிலங்கு சரணாலயத்தின் விரிவாக்கம்
    • கட்சிரோலியில் உள்ள கோலமார்கா
    • ஜல்கானில் உள்ள முக்தாய் பவானி
  • கட்சிரோலியில் உள்ள கோலமார்கா இடதுசாரி தீவிரவாதிகளின் நடமாட்டத்தால் பாதிக்கப் பட்டுள்ளது.
  • இது ஆபத்து நிலையில் ஆசியக் காட்டு எருமைகளை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்