TNPSC Thervupettagam

புதிய வளர்ச்சி வங்கியின் புதிய தலைவர்

May 31 , 2020 1548 days 986 0
  • மர்க்கோன் ட்ரோய்ஜோ என்பவர் புதிய வளர்ச்சி வங்கியின் (NDB - New Development Bank) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இவர் பிரேசிலின் முன்னாள் துணைப் பொருளாதார அமைச்சர் ஆவார். இந்தப் பன்னாட்டு நிதியியல் நிறுவனத்தின் தலைவராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த K.V. காமத் என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியாவைச் சேர்ந்த அனில் கிஷோரா என்பவர் இந்த வங்கியின் துணைத் தலைவர் மற்றும் தலைமை இடர்பாட்டு அதிகாரி ஆவார்.
  • இந்தியாவைச் சேர்ந்த K.V. காமத் என்பவர் NDBயின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர் ஆவார்.
  • மேலும் இது பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இதன் தலைமையகம் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது.
  • NDBயின் முதலாவது பிராந்திய அலுவலகம் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க்கில் அமைந்துள்ளது.
  • இது 2014 ஆம் ஆண்டில் பிரிக்ஸின் போர்த்தலீசா பிரகடனத்தின் மூலம் அமைக்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்