ஒரு புதிய விரிவான மினி பேருந்து (சிற்றுந்து) திட்டம், 2024 என்ற ஒரு புதிய வரைவு அறிக்கையானது தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவுத் திட்டமானது, பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 25 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
தற்போது, மினி பேருந்துகள் அதிகபட்சமாக 20 கி.மீ வரை இயக்கப்பட அனுமதிக்கப் பட்டுள்ளது என்ற நிலையில் இதில் 16 கி.மீ பேருந்து இயக்கப் பாதையானது தொலை தூரப் பகுதிகளில் அமைய வேண்டும்.
மாநில அரசு ஆனது, 1997 ஆம் ஆண்டில் மினி பஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்ற நிலையில் அதன் கீழ் பேருந்து இயக்க நிறுவனங்கள் 16 கி.மீ. நீளப் பாதை வரை மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பேருந்து இயக்க நிறுவனங்கள் 20 கி.மீ. வரை நீளம் பாதைகளிலும் இயக்க அனுமதிக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.