TNPSC Thervupettagam

புதிய விரிவான மினி பேருந்து திட்டம், 2024

June 20 , 2024 157 days 260 0
  • ஒரு புதிய விரிவான மினி பேருந்து (சிற்றுந்து) திட்டம், 2024 என்ற ஒரு புதிய வரைவு அறிக்கையானது தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வரைவுத் திட்டமானது, பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் 25 கி.மீ. என்ற அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச தொலைவு வரையில் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதிக்கச் செய்கிறது.
  • தற்போது, ​​ மினி பேருந்துகள் அதிகபட்சமாக 20 கி.மீ வரை இயக்கப்பட அனுமதிக்கப் பட்டுள்ளது என்ற நிலையில் இதில் 16 கி.மீ பேருந்து இயக்கப் பாதையானது தொலை தூரப் பகுதிகளில் அமைய வேண்டும்.
  • மாநில அரசு ஆனது, 1997 ஆம் ஆண்டில் மினி பஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்ற நிலையில் அதன் கீழ் பேருந்து இயக்க நிறுவனங்கள் 16 கி.மீ. நீளப் பாதை வரை மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டன.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பேருந்து இயக்க நிறுவனங்கள் 20 கி.மீ. வரை நீளம் பாதைகளிலும் இயக்க அனுமதிக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்