நாசாவின் விண்வெளி தொலைநோக்கியான டெஸ்-இன் தரவுகளைப் பயன்படுத்தி 5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மற்றும் பூமியை விட 60 மடங்கு பெரிய அளவுடைய புதிய கோளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
TOI-197.0 என அறியப்படும் இந்தக் கோளானது தற்போது சிறப்பாக விளக்கப்பட்டுள்ள வெளிக்கோள்களுள் ஒன்றாகும்.
அறிவியலாளர்கள் இதை ‘சூடான சனி’ என அழைக்கின்றனர். ஏனெனில் இது சனிக் கோளின் அளவினையொத்தது ஆகும். ஆனால் இது சனியை விட மிகவும் வெப்பமானதாகும்.
ஏனென்றால் சனிக் கோளானது சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப் பாதையை விட இந்த புதியக் கோளானது தான் சுற்றி வரும் நட்சத்திரத்துடன் மிகவும் அண்மையில் அமைந்துள்ளது.