நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு குழுவானது “கெப்ளர் – 1649சி” என்ற ஒரு வெளிக் கோளைக் கண்டுபிடித்துள்ளது.
இது, தனது நட்சத்திரத்தின் (கெப்ளர் சிவப்புக் குள்ள நட்சத்திரம் – 1649) வாழ்விட (உயிர் வாழத் தகுந்த) மண்டலத்தைச் சுற்றி வருகின்றது.
உயிர் வாழத் தகுந்த மண்டலம் என்பது திரவ நீருக்குச் சாதகமாகவுள்ள ஒரு செந்நிறக் கோளின் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள பகுதியாகும்.
இது பூமியிலிருந்து 300 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
இது அளவு மற்றும் மதிப்பிடப்பட்ட வெப்பநிலை ஆகியவற்றில் பெரும்பாலும் பூமியைப் போன்றே உள்ளது.
இந்தப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உலகமானது நமது பூமியை விட 1.06 மடங்கு மட்டுமே பெரியதாகும்.
மேலும், அதன் சொந்த நட்சத்திரத்திலிருந்து அது பெறும் நட்சத்திர ஒளியின் அளவானது சூரியனிலிருந்து பூமி பெறும் ஒளியில் 75 சதவிகிதம் ஆகும்.
இது அந்த வெளிக் கோளின் வெப்பநிலையானது நமது கோளினைப் போன்றே இருப்பதைக் குறிக்கின்றது.
ஆனால் பூமியைப் போல் அல்லாமல், அது ஒரு சிவப்புக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது.
கெப்ளர் – 1649Cன் ஒரு வருடமானது 19.5 புவி நாட்கள் மட்டுமே ஆகும்.
இந்த வகை நட்சத்திரமானது நட்சத்திரம் சார்ந்த ஒளிக்காக அறியப் படுகின்றது. அந்த நிகழ்வானது கோளின் சுற்றுச்சூழலை உயிர்களின் எந்தவொரு சாத்தியமான வாழ்க்கைக்கும் ஒரு சவாலானதாக மாற்ற முயலலாம்.
இது எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட இருக்கும் நட்சத்திரங்களிடையே காணப்படும் இரண்டாவது பூமியாக இருக்கும் என்று நம்பப் படுகின்றது.
கெப்ளர் திட்டம் மற்றும் வெளிக்கோள்களை கண்டறிவதற்கான ஆய்வுச் செயற்கைக் கோள் திட்டம் போன்ற திட்டங்களால் சேகரிக்கப்பட்ட தரவானது அற்புதமான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுவதைத் தொடரும்.
அளவில் பூமிக்கு அருகிலுள்ள இதர வெளிக்கோள்கள் டிராப்பிஸ்ட் – 1F மற்றும் டீகார்டன் – சி (Teegarden c) ஆகியவை ஆகும்.
வெப்பநிலையில் பூமிக்கு அருகிலுள்ள இதர வெளிக்கோள்கள் டிராப்பிஸ்ட் – 1d மற்றும் TOI 700d ஆகியவையாகும்.
ஆனால் தனது வாழ்விட மண்டலத்தில் அமைந்துள்ள எந்தவொரு இதர வெளிக்கோளும் இந்த இரண்டு மதிப்புகளிலும் பூமிக்கு மிக அருகில் ஒத்து இருப்பதாகக் கண்டறியப் படவில்லை.
கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியானது வெளிக்கோள்களைக் கண்டறிவதற்காக நாசாவினால் செலுத்தப்பட்ட ஓர் காலாவதியான தொலை நோக்கியாகும்.
ஜோகன்ஸ் கெப்ளர் என்ற வானியலாளரின் நினைவாக பெயரிடப்பட்ட இந்த விண்கலமானது பூமி கதிரவனை மையமாகக் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்குள் 2009 ஆம் ஆண்டில் செலுத்தப் பட்டது.
நாசா இதன் ஓய்வை 2018 ஆம் ஆண்டில் அறிவித்தது.
இது வாழ்விட மண்டலத்திற்கு உள்ளேயோ அல்லது அதன் அருகிலேயோ பூமி போன்ற இருக்கும் வெளிக் கோள்களைக் கண்டறிவதற்காக பால்வழி அண்டத்தின் பூமியின் ஒரு பகுதியை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
பால்வழி அண்டத்தில் எத்தனை மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் இது போன்ற கோள்களைக் கொண்டிருக்கின்றன என்று மதிப்பிடப்பட இது செலுத்தப் பட்டது.