TNPSC Thervupettagam

புதிய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை

July 29 , 2024 120 days 182 0
  • மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் மூன்று முக்கியத் திட்டங்களை வெளியிடப் பட்டு உள்ளது.
  • அடுத்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திட்டம் A ஆனது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) பதிவு செய்யப் பட்ட முதல் முறையாகப் பணியில் இணையும் ஊழியர்களுக்கு மூன்று தவணைகளில் 15,000 ரூபாய் வரையிலான ஒரு மாத ஊதியத்தின் நேரடிப் பலன் பரிமாற்றத்தை (DBT) வழங்கும்.
  • திட்டம் B ஆனது உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
  • பணிக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் EPFO ​​பங்களிப்புகளின் அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் நேரடியாக ஊக்கத்தொகை வழங்கப் படும்.
  • திட்டம் C ஆனது, இரண்டு ஆண்டுகளுக்கு என்று மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வரை திருப்பி செலுத்துதலுடன் பெருநிறுவன முதலாளிகளுக்கான நிதி மானியத்தினையும் உள்ளடக்கியது.
  • இது அங்கு பணியமர்த்தும் ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் EPFO ​​பங்களிப்புகளைப் பொறுத்து வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்