TNPSC Thervupettagam

புதிய வேளாண் தொழில்நுட்பத் திட்டங்கள் 2025

February 10 , 2025 17 days 96 0
  • அரசு புதிதாக அறிவித்த குறைந்தது ஒன்பது புதியத் திட்டங்கள் ஆனது வேளாண் துறையை மட்டுமே மையமாகக் கொண்டவையாகும்.
  • இருப்பினும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் ஒட்டுமொத்தமாக 2.5 சதவீதம் குறைக்கப்பட்டது.
  • பிரதான் மந்திரி தன்-தான்ய கிரிஷி யோஜனா என்ற ஒரு திட்டமானது, தற்போதுள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல் படுத்தப் படும்.
  • இது குறைந்த உற்பத்தித் திறன், மிதமான பயிர் வளர்ப்பு செறிவு மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அளவுருக்கள் கொண்ட 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விரிவான இந்தத் திட்டமானது மாநிலங்களுடன் இணைந்து தொடங்கப்படும்.
  • இது விவசாயிகளுக்கு அதன் உற்பத்தி, பயன்திறம் மிக்க விநியோகம், பதப்படுத்துதல் மற்றும் ஊதிய விலைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்திற்காக 2025-26 ஆம் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசியத் திட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட அதிக மகசூல் தரும், பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட மற்றும் பருவநிலை-எதிர்ப்பு திறன் கொண்ட விதை வகைகளின் வணிக ரீதியாக கிடைக்கும் தன்மை, மேம்பாடு மற்றும் பரப்புதலை இலக்காகக் கொண்டது.
  • மக்கானா (தாமரை விதை) உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் அதன் சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதற்காக பீகாரில் ஒரு மக்கானா வாரியம் நிறுவப் பட உள்ளது.
  • திறன் பயிற்சி, முதலீடு மற்றும் தொழில்நுட்பம் மூலம் வேளாண்மையில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை நிவர்த்தி செய்வதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து 'கிராமப்புறச் செழிப்பு மற்றும் மீள்தன்மைத் திட்டம்' முன்னெடுப்பானது தொடங்கப் படும்.
  • இது கிராமப்புற பெண்கள், இளம் விவசாயிகள், கிராமப்புற இளையோர்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்றக் குடும்பங்கள் மீது கவனம் செலுத்தும்.
  • யூரியா விநியோகத்தை மேலும் அதிகரிப்பதற்காக, அசாமின் நம்ரூப் எனுமிடத்தில் ஆண்டிற்கு 1.27 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட யூரியா ஆலை அமைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்