புதியப் பங்கு வெளியீட்டு நடைமுறை – ஆயுள் காப்பீட்டுக் கழகம்
February 17 , 2022
1013 days
498
- ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள தனது 5% பங்கினை விற்பதற்கு இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
- இதன் மூலம் 65,000 கோடி ரூபாய் நிதியினைத் திரட்ட அரசு முயற்சி செய்கிறது.
- இதில் 10% பங்குகளானது தகுதி வாய்ந்த காப்பீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
- இதில் 316.25 மில்லியன் பங்குகளை விற்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
- இது மொத்தப் பங்கில் 5 சதவிகிதத்திற்குச் சமமானதாகும்
- ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மொத்தப் பங்கு 6.32 பில்லியன் பங்குகள் ஆகும்.
- இதில் 35% பங்குகள் சில்லறை விற்பனை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட உள்ளன.
Post Views:
498