TNPSC Thervupettagam

புதியவகை – நோய் நுண்ணுயிர் எதிரிகள் - ஒடிலோர்ஹாப்டின்ஸ்

April 19 , 2018 2283 days 746 0
  • மருந்து எதிர்ப்புத் தன்மையை (drug resistance) எதிர்க்கும் திறனுடைய ஒடிலோர்ஹாப்டின்ஸ் (odilorhabdins) அல்லது ODLs என்றழைக்கப்படும் புதிய ஆண்டிபயாடிக்  (நுண்ணுயிர்க்கொல்லிகள்) வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • உணவுக்காக பூச்சிகளைத் தொற்றி வாழ்கின்ற மண்வாழ் நூற்புழுக்களில் காணப்படுகின்ற இணைந்து வாழும் பாக்டீயாக்களினால் (symbiotic bacteria) இந்த புதிய வகை ஆண்டிபயாடிக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • நூற்புழுவில் உள்ள பாக்டீரியாவானது பூச்சிகளைக் கொல்வதற்கு நூற்புழுவிற்கு உதவுகின்றது. தனக்கான போட்டி பாக்டீரியங்களை விலக்கி வைப்பதற்காக ஆன்டிபயாடிக்குகளை இந்த பாக்டீரியங்கள் சுரக்கின்றன.
  • பல்வேறு பயனுள்ள மருத்துவ நுண்ணுயிரிகள் போல ODL நுண்ணுயிரிகள் ரைபோசோம்களை இலக்கிட்டு செயல்படுகின்றன.
  • வேறு எந்த எதிர் நுண்ணுயிரிகளும் பயன்படுத்தாத ரைபோசோம்களின் பகுதியில் ODL எதிர் நுண்ணுயிரிகள் பிணைந்து செயல்படுகின்றன. இந்த வகையில் ODL எதிர் நுண்ணுயிரிகள் தனித்துவம் வாய்ந்தவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்