தோலுக்கு அடியில் இண்டர்ஸ்டிடியம் (interstitium) எனும் புதிய உறுப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
நுரையீரல்கள், இரத்த நாளங்கள், தசைகள் மற்றும் குடல் நாளங்கள் ஆகியவற்றை சுற்றியுள்ள திசுக்களில் இந்த படலம் காணப்படுகின்றது.
இந்த இண்டர்ஸ்டிடியம் படலமானது எப்படி புற்று நோய் செல்கள் உடலில் பரவுகின்றன என புரிந்து கொள்ள உதவும். மேலும் நோய் கண்டறி கருவியாகவும் பயன்படும் வாழும் திசுக்கள் மீதான ஆராய்ச்சி அடிப்படையிலான கான்போகல் லேசர் எண்டோமைட்ரோஸ்கோபி (probe-based confocal laser endomicroscopy on a living tissue) எனும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் இண்டர்ஸ்டிடியம் எனும் இந்த படல உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தோலிற்கு நிலைத்தன்மையும் (Durability) நெகிழ்ச்சித் தன்மையும் (Elasticity) தருகின்ற கொல்லாஜன் (collagen), எலாஸ்டின் (elastin), மற்றும் புரதங்கள் போன்றவற்றை இப்படலம் கொண்டுள்ளது.
இப்படலத்தை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர் குழுவானது இப்படலமானது அதிர்ச்சி உறிஞ்சிகளாக (shock absorbers) கூட செயல்படுமென தெரிவித்துள்ளது. அதன் மூலம் சேதங்களிலிருந்து உடற் திசுக்களை இப்படலம் பாதுகாக்கும்.
இப்படலமானது ஓர் உடற் உறுப்பா அல்லது இல்லையா என உறுதி செய்ய ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.