புது தில்லியில் பசுமைப் பட்டாசுகள்
November 3 , 2020
1488 days
601
- நவம்பர் 14 அன்று கொண்டாடப்படும் தீபாவளியானது இந்தியாவின் முதலாவது பசுமைத் தீபாவளியாக இருக்கும்.
- பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தேசியத் தலைநகர்ப் பகுதியில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
- இந்தப் பட்டாசுகள் சாதாரணப் பட்டாசுகளை விட 30% குறைவாக மாசுபடுத்தும் திறன் கொண்டது.
- கடுமையான புகை மற்றும் உமிழ்வுகளுக்குக் காரணம் இரசாயன பேரியம் நைட்ரேட் என்பதாகும்.
- மேலும் பசுமைப் பட்டாசுகள் லித்தியம், ஆர்செனிக், ஈயம் போன்ற தடை செய்யப் பட்ட இரசாயனங்களைக் கொண்டிருப்பதில்லை.
- இவை பாதுகாப்பு நீர் வெளியேற்றி, பாதுகாப்பான தெர்மைட் பட்டாசு மற்றும் பாதுகாப்பான குறைவான அலுமினியப் பட்டாசுகள் என்றும் அழைக்கப் படுகின்றன.
- பசுமைப் பட்டாசுகள் நீராவியை வெளியேற்றுகின்றன. எனவே இவை மாசுத் துகள்கள் மேலே எழும்புவதை அனுமதிப்பதில்லை.
- பட்டாசுப் புகையானது முக்கியமாக சல்பர் டை ஆக்ஸைடு, மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவற்றின் உமிழ்வுகளிலிருந்து வெளி வருகின்றன.
- நாக்பூரில் உள்ள சிஎஸ்ஐஆர்-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் இந்தப் பட்டாசுகளைத் தயாரித்துள்ளது.
Post Views:
601