இந்நாளில் 1963 ஆம் ஆண்டு ஒன்றியப் பிரதேசங்கள் அரசு சட்டம் அமலுக்கு வந்தது.
இது புதுச்சேரிக்கு சட்டமன்றம் மற்றும் அமைச்சர்கள் குழுவினை நிறுவுவதற்கான விதிமுறைகளை வழங்குகிறது.
1693 ஆம் ஆண்டில் புதுச்சேரி டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்ட புதுச்சேரி, 1699 ஆம் ஆண்டில் ரைஸ்விக் என்ற உடன்படிக்கையின் மூலம் பிரெஞ்சு நிறுவனத்திடம் திரும்ப வழங்கப் பட்டது.
1674 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் ஆளுநராக ஃபிராங்கோயிஸ் மார்ட்டின் நியமிக்கப்பட்டார்.
புதுச்சேரி அதிகாரப்பூர்வமாக பிரெஞ்சு இந்தியாவிலிருந்து இந்தியக் குடியரசிற்கு மாற்றப் பட்டு 1954 ஆம் ஆண்டில் ஒன்றியப் பிரதேசமாக மாறியது.