TNPSC Thervupettagam

புதுச்சேரி விடுதலை தினம் – நவம்பர் 01

November 3 , 2020 1397 days 408 0
  • புதுச்சேரி ஒன்றியப் பிரதேசமானது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா விடுதலை அடைந்த பிறகு, 7 ஆண்டு கால நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் அந்நியரிடமிருந்து விடுதலை பெற்றது.
  • இந்த இணைப்பானது பிரெஞ்சு நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட ஒரு  பொது வாக்கெடுப்பின் மூலம் ஜனநாயக ரீதியாகத் தீர்மானிக்கப் பட்டது.
  • 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, சட்டசபைப் பிரதிநிதிகள், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் அதனை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  • பின்னர், மீதமுள்ள நான்கு குடியிருப்புகளான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தமானது 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று கையெழுத்திடப்பட்டது.
  • இது 1954 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று நடைமுறைக்குக் கொண்டு வரப் பட்டது.
  • 2014 ஆம் ஆண்டில், புதுச்சேரி அரசானது நவம்பர் 01 ஆம் தேதியானது புதுச்சேரி விடுதலை நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்