புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மற்றும் வேலைவாய்ப்புகளின் வருடாந்திர ஆய்வு அறிக்கை 2024
November 4 , 2024 18 days 74 0
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை (IRENA) ஆனது, “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் வேலைகள்” என்ற தலைப்பில் அதன் வருடாந்திர மதிப்பாய்வு (2024) என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 13.7 மில்லியனாக இருந்த உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) பணியாளர் வளங்களின் எண்ணிக்கை ஆனது தற்போது சுமார் 16.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 1.02 மில்லியன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க துறையில் நீர் மின்னாற்றல் மிகப்பெரிய வேலை வாய்ப்பளிக்கும் துறையாக இருந்தது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து சூரிய ஒளி மின்னழுத்த (PV) துறை இடம் பெற்றுள்ளது.
இந்தியா 2023 ஆம் ஆண்டில் 9.7 GW அளவிலான சூரிய ஒளி மின்னழுத்த ஆற்றல் PV திறனை உற்பத்தி செய்துள்ளது என்பதோடு, புதிய நிறுவல்கள் மற்றும் ஒட்டு மொத்த திறனில் உலகளவில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது (2023 ஆம் ஆண்டின் இறுதியில் 72.7 GW அளவினை எட்டியது).
2023 ஆம் ஆண்டில் மின் பகிர்மானக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய ஒளி மின்னழுத்த ஆற்றல் துறையில் இந்தியாவில் 2.38 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன.
இந்தியாவின் காற்றாலை உற்பத்தித் திறன் ஆனது 2023 ஆம் ஆண்டில் 44.7 GW திறனை எட்டியது (உலக அளவில் நான்காவது இடம்) என்பதோடு 2.8 GW திறன் என்பது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.