TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் புள்ளி விவரங்கள் அறிக்கை 2021

April 9 , 2021 1201 days 585 0
  • இந்த அறிக்கை சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தினால் (IRENA – International Renewable Energy Agency) வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கை, 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 260 GW புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்  திறன் அதிகரித்துள்ளதாக கூறுகிறது.
  • காற்று மற்றும் சூரிய ஆற்றலின் 91% புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனுடன், 2020 ஆம் ஆண்டில் அதிகரிக்கப் பட்ட 80%க்கும் மேற்பட்ட அனைத்துப் புதிய மின்சார உற்பத்தித் திறன்களும் புதுப்பிக்கத்தக்க வகை ஆற்றலைச் சார்ந்தவைகும்.
  • உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையான சீனா கடந்த ஆண்டில் 136 GW திறன் என்ற அளவிற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனை நிறுவி உள்ளது.
  • அமெரிக்காவானது 29 GW என்ற அளவிற்கு ஆற்றல் உற்பத்தித் திறனை நிறுவியுள்ளது.
  • உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறன் 30% ஆக உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் ஒப்புக் கொண்டபடி, நீண்ட நாள் இலக்கினை அடையும் முயற்சியில் பல்வேறு நாடுகள் புதைபடிவ எரிபொருள்களிலிருந்துப்  புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாறி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்