TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி மற்றும் முதலீடு 2024

November 15 , 2024 10 days 43 0
  • இந்தியாவின் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் ஆனது ஓராண்டில் 13.5 சதவீதம் அல்லது 24.2 ஜிகாவாட் அதிகரித்து 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 203.18 ஜிகா வாட்டை எட்டியது.
  • இது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 178.98 GW ஆக இருந்தது.
  • அணுசக்தி உட்பட, மொத்தப் புதைபடிவம் சாரா எரிபொருள் திறன் ஆனது 2023 ஆம் ஆண்டில் 186.46 GW ஆகவும் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 211.36 GW ஆக உயர்ந்தது.
  • சூரிய சக்தி உற்பத்தித் துறையானது 20.1 ஜிகாவாட் (27.9 சதவீதம்) என்ற அளவில் மிக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டது.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 72.02 ஜிகாவாட்டாக இருந்த இது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 92.12 ஜிகாவாட்டாக உயரும்.
  • செயல்படுத்தப்பட்ட மற்றும் ஏலம் விடப்பட்ட பல்வேறு உற்பத்தித் திட்டங்கள் உட்பட ஒருங்கிணைந்த மொத்த சூரிய சக்தி உற்பத்தித் திறன் தற்போது 250.57 ஜிகாவாட்டாக உள்ளது.
  • இது கடந்த ஆண்டு பதிவான 166.49 ஜிகாவாட் அளவிலிருந்து பதிவான குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 44.29 ஜிகாவாட்டாக இருந்த காற்றாலை ஆற்றலின் நிறுவப்பட்ட திறன் ஆனது 2024 ஆம் ஆண்டில் 7.8 சதவீதம் அதிகரித்து 47.72 ஜிகா வாட்டாக உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்