TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 2024

August 16 , 2024 102 days 166 0
  • இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் ஆனது கடந்த பத்தாண்டுகளில் 165 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் 76.38 ஜிகாவாட் (GW) ஆக இருந்த இதன் அளவானது 2024 ஆம் ஆண்டில் 203.1 GW ஆக உயர்ந்துள்ளது.
  • நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா உலகளவில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியா காற்றாலை ஆற்றல் உற்பத்தித் திறனில் 4வது இடத்திலும், சூரிய சக்தி ஒளி மின்னழுத்த உற்பத்தி திறனில் 5வது இடத்திலும் உள்ளது.
  • முதன்முறையாக, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்துப் பெறப்படும் இந்தியாவின் ஆற்றல் உற்பத்தியானது 200 GW திறனைத் தாண்டியுள்ளது.
  • இதில் 85.47 ஜிகாவாட் சூரிய சக்தி மற்றும் 46.93 ஜிகாவாட் மாபெரும் நீர் மின் நிலையங்கள், 46.66 ஜிகாவாட் காற்றாலை, 10.95 ஜிகாவாட் உயிரி சார் ஆற்றல் மற்றும் 5.00 ஜிகாவாட் சிறிய நீர்மின் நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்