TNPSC Thervupettagam

புதுமைப் பெண் திட்டத்தின் தாக்கம்

March 19 , 2024 250 days 370 0
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்-புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் 49,600க்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைய உள்ளனர்.
  • சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் 23,560 மாணவிகள் உட்பட தமிழ் வழியில் பயிலும் 49,664 மாணவிகள் உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
  • அனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களை உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டத்தின் பரவலை விரிவுபடுத்துவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
  • இத்திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற பெண்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்