TNPSC Thervupettagam

புதுமைப் பெண் திட்டத்தின் முதன்மை மதிப்பீடு

November 20 , 2024 5 days 104 0
  • தமிழ்நாடு மாநில திட்டக் குழுவானது (SPC) புதுமைப் பெண் திட்டத்தின் முதன்மை மதிப்பீட்டினை மேற்கொண்டுள்ளது.
  • 13,681 கூடுதல் மாணவர்கள் இந்த முன்னெடுப்பினால் பயனடைந்ததன் மூலம், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் சேர்ந்தனர்.
  • இது 6.9 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • அவர்களில், 38.6% பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SC), 34.4% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), மற்றும் 24.8%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) ஆவர்.
  • இதன்படி, சேலத்தில் அதிகபட்சமாக 8.9% கல்லூரி மாணவர் சேர்க்கை பதிவாகி உள்ளது, அதனைத் தொடர்ந்து சென்னை 5.8%; தர்மபுரி 5.5%; திருவண்ணாமலை 5.2%; நாமக்கல் 4.8%; மற்றும் கடலூர் 4.1% ஆகியவை உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 2,30,820 ஆக இருந்தது.
  • 17,032 (7.38%) எண்ணிக்கையுடன், சேலம் மாவட்டம் ஆனது இத்திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயனடைந்த மாணவர்களைக் கொண்டுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து சுமார் 13,312 என்ற எண்ணிக்கையுடன் நாமக்கல் (5.77%); 11,915 எண்ணிக்கையுடன் தருமபுரி (5.16%); 11,468 எண்ணிக்கையுடன் சென்னை (4.97%); 11,146 எண்ணிக்கையுடன் திருவண்ணாமலை (4.83%); மற்றும் 10,777 எண்ணிக்கையுடன் கோயம்புத்தூர் (4.67%) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்