TNPSC Thervupettagam

புதுமையோடு ஒருங்கிணைப்புத் திட்டம்

August 5 , 2018 2179 days 641 0
  • இன்வெஸ்ட் இந்தியா நிறுவனம் ஆற்றல் நிறுவனங்களுடன் இணைந்து ஆற்றல் துறையில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காக புதுமையோடு ஒருங்கிணைப்பு (Integrate to Innovate - i2i) என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
  • ஆற்றல் துறையில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களுக்கும் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மின்சாரத் துறையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான 3 மாத திட்டம் இதுவாகும்.
  • இந்நிறுவனம் மத்திய அரசின் அலுவல் பூர்வமான முதலீட்டு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு நிறுவனமாகும்.
  • இந்நிறுவனம் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் இலாப நோக்கமற்ற நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்