புதைபடிவ மரத்தில் வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்கள்
June 1 , 2024 206 days 286 0
சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், பாந்தவ்கர் தேசிய பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தில் இருந்து புதைபடிவமான மரத்தால் செய்யப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கலைப் பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
பண்டைய காலத்தினைச் சேர்ந்த வேட்டையாடி உணவு உண்ட மக்கள் தங்கள் கருவிகள் மற்றும் கலைப்பொருட்களை உருவாக்க வேண்டி புதைபடிவமான மரத்தின் தண்டுகளை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தினர் என்று இந்தக் கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.
அவை குறைந்தது சுமார் 10,000 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது மத்தியப் பிரதேசத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் அமைந்துள்ள குக்வா தேசிய புதை படிவப் பூங்கா 1983 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக நிறுவப்பட்டது.
புதைபடிவமான மரத்தால் செய்யப்பட்ட கருவிகள் இந்தியாவில் அரிதானவை என்ற நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் என சில இடங்களில் மட்டுமே இவை காணப்படுகின்றன.