புதைபடிவத்திலிருந்து டிஎன்ஏவைப் பிரித்தெடுப்பதற்கான ஊடுருவல் சாராத முறை
May 16 , 2023 561 days 264 0
அறிவியலாளர்கள் சிதைவுறா டிஎன்ஏ பிரித்தெடுப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.
இதில், புதைப்படிவப் பொருள்கள் சோடியம் பாஸ்பேட் இடையகக் கரைசலில் மூழ்க வைக்கப் பட்டு, பிறகு அதன் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது.
பழங்கால எலும்பு மற்றும் பல் பொருட்களில் சிக்கியுள்ள டிஎன்ஏ கரைசலில் வெளியிடப் பட்டு, மேலும் வரிசைப்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
கலைப்பொருட்களை 90 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கழுவுவதன் மூலம், கலைப் பொருட்களை அப்படியே வைத்திருக்கும் வகையில், கழுவும் நீரில் இருந்து டிஎன்ஏவைப் பிரித்தெடுக்க முடியும்.
ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதிய முறையை டெனிசோவா குகையில் இருந்து பெறப் பட்ட ஒரு மான் பல்லினால் செய்யப்பட்ட ஒரு கலைப் பொருளில் பயன்படுத்தி, ஒரு வாபிடி (மரை காட்டு மான் இனங்கள்) மற்றும் ஒரு பண்டைய மனிதனின் டிஎன்ஏவை மீட்டெடுக்க முடிந்தது.
டிஎன்ஏ பகுப்பாய்வுகள் அந்தப் பொருளின் காலத்தினை சுமார் 19,000-25,000 ஆண்டுகள் என மதிப்பிட வழி வகுத்தன.
பொதுவாக, பழங்கால எலும்புக் கூடுகளிலிருந்து டிஎன்ஏ பிரித்தெடுத்தல் ஆனது மிகச் சேதாரம் உண்டாக்கக் கூடியதாக இருக்கலாம் அல்லது அந்த மாதிரிகளை வெகுவாக மாற்றி அமைக்கக் கூடியதாக இருக்கலாம்.