TNPSC Thervupettagam

புத்தாக்க ஆலோசனைக் குழு

August 30 , 2018 2151 days 679 0
  • மத்திய அரசாங்கமானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான பிரதம அமைச்சரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். (PM-STIAC - Prime Minister’s Science, Technology and Innovation Advisory Council)
  • இதற்குமுன் செயல்பட்டு வந்த பிரதம அமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் அறிவியல் சார்ந்த ஆலோசனைக் குழுவிற்குப் பதிலாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இக்குழு அரசாங்கத்திற்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தலைமையில் செயல்படும்.
  • இக்குழு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பானை ஆலோசனைகளை பிரதம அமைச்சருக்கு அளிக்கும்.
  • மேலும் இக்குழு பிரதம அமைச்சரின் அறிவியல்சார்ந்த தொலைநோக்குப் பார்வை மீதான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும்.
  • இக்குழுவானது முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை வகுத்தல் மற்றும் தக்க நேரத்தில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு உதவும். இக்குழு பல்துறை தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க உதவும்.
  • இக்குழு நகரத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திரள்கள் உள்ளிட்ட அறிவியலில் “தனிச்சிறப்புத் திரள்” உருவாக்குவதற்கான ஆலோசனைகளை மத்திய அரசிற்கு வழங்கும்.
  • இக்குழுவின் தலைவர் உள்பட ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இந்த ஒன்பது உறுப்பினர்களைத் தவிர, மேலும் 12 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
    • அறிவியல், தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் கல்வி தொடர்பான 11 பதவிசார் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் இக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்