இந்திய ரிசர்வ் வங்கியானது நிதியியல் உள்ளடக்கத்தை வலுப்படுத்துவதற்காக செயல்படும் திறன் கொண்ட புதிய திறன்களின் எண்ணம் மற்றும் உருவாக்கத்திற்கான “புத்தாக்க மையத்தை” தொடங்கியுள்ளது.
இந்த மையமானது நாட்டில் ஸ்டார்ட் அப்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த மையமானது சாத்தியமான மற்றும் புத்தாக்க நிதியியல் கூறுகளை உருவாக்குவதற்கான மையமாகச் செயல்பட இருக்கின்றது.
சமீபத்திய முன்னெடுப்புகளில் ஒன்று “ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ்” (Regulatory Sandbox) என்பதாகும்.
ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்குமுறைச் சூழலில் புதிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிகழ்நேர சோதனையைக் குறிக்கின்றது.