இங்கிலாந்து நாட்டின் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளர் கரேத் சௌத்கேட், இந்த ஆண்டுக்கான புத்தாண்டு விருதுகள் பட்டியலில் வீரப் பெருந்தகையாகப் (நைட்) தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.
800 மீட்டர் ஒலிம்பிக் ஜாம்பவான் ஆன கீலி ஹாட்ஜ்கின்சன் மற்றும் பாரீஸ் நகரில் வெள்ளி வென்ற ஹெப்டத்லெட் கத்தரினா ஜான்சன்-தாம்சன் ஆகிய இருவரும் MBE விருதினைப் பெறுகிறார்கள்.
சைக்கிள் ஓட்டும் வீரர் டாம் பிட்காக், நீச்சல் வீரர் டங்கன் ஸ்காட் மற்றும் துடுப்புப் படகோட்ட வீரர் ஹெலன் குளோவர் ஆகியோர் தங்கள் பங்களிப்புகளுக்காக என OBE விருதுகளைப் பெற்றனர்.
குழந்தைகளுக்கானப் புத்தக எழுத்தாளர் ஜாக்குலின் வில்சன் டேம் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பையர் விருதினைப் பெற்றார்.