வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான புத்தொழில் நிறுவனங்களின் சூழலமைவுகளை உருவாக்குவதில் குஜராத், கேரளா மற்றும் கர்நாடகா சிறந்த செயல் திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் சிறந்த செயல்திறன் கொண்டவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் புத்தொழில் நிறுவனங்கள் தரவரிசை ஆனது தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையினால் (DPIIT) தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் மொத்தம் 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் பங்கேற்றன.
DPIIT அவற்றைச் சிறந்த செயல்திறன் கொண்டவைகள், முன்னணி செயல்திறன் கொண்டவைகள், முதன்மையானவை, ஈடுபாடுமிக்கவை மற்றும் வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவன சூழல் அமைப்புகள் என ஐந்து பிரிவுகளின் கீழ் தரவரிசைப் படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக வேண்டி புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் அவை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.