TNPSC Thervupettagam

புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பை ஆதரிக்கும் முன்னெடுப்புகள்

November 15 , 2024 13 days 67 0
  • தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலான பல முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • முதல் முன்னெடுப்பு பெரியார் சமூக நீதி துணிகர முதலீட்டு ஆய்வகம் ஆகும்.
  • இது சமூக நிறுவனங்கள், பல்வேறு பருவநிலை நடவடிக்கை முன்னெடுப்புகள் மற்றும் பட்டியலிடப் பட்ட சாதியினர்/ பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் புத்தாக்க தொழில் நிறுவனர்களுக்கான பிரத்தியேக ஆலோசனை, திறன் பயிற்சி மற்றும் ஊக்கமளிப்புத் திட்டங்கள் ஆகியவற்றினை முதலீட்டிற்கு முந்தைய மற்றும் முதலீட்டிற்குப் பிந்தைய நிலைகளில் வழங்கும்.
  • மற்றொன்று தொழில் நயம் வடிவமைப்பு மையம் ஆகும்.
  • இது இணைய வழி வணிகத் தளங்களில் வெற்றிகரமான இடம் பெற்றிருப்பதன் மூலம் மாநிலத்தில் நேரடி நுகர்வோர் சேவை (D2C) வழங்கும் புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசானது, சமீபத்தில் துபாயில் உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையத்தினை நிறுவியது.
  • சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் இது போன்ற மையங்கள் விரைவில் நிறுவப் படும்.
  • சமீபத்தில் துபாயில் நடைபெற்ற புகழ்பெற்ற GITEX நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தைச் சேர்ந்த 19 புத்தொழில் நிறுவனங்களுக்கும் அரசு நிதியுதவி அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்