மாநிலங்களின் 2022 ஆம் ஆண்டு புத்தொழில் நிறுவனங்கள் தரவரிசையில், ‘சிறந்த செயல்திறன்’ பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்ற ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலமும் இடம் பெற்றுள்ளது.
குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இந்த சிறந்த செயல்திறன் பிரிவின் கீழ் அங்கீகாரம் பெற்ற மற்ற மாநிலங்கள் ஆகும்.
முதல் இரண்டு தரவரிசைகளில், தமிழ்நாடு மாநிலம் மிகவும் கடைநிலைப் பிரிவான ‘வளர்ந்து வரும் சூழல் அமைப்பு’ பிரிவில் இடம் பெற்றது.
இது 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூன்றாம் தரவரிசையில் 'முன்னணி' பிரிவில் அங்கீகரிக்கப்பட்டது.
கிரீன்விரோ குளோபல் நிறுவனம் ஆனது, இந்த நிகழ்வில் ‘நிலைத்தன்மை வாகையர்’ பிரிவின் கீழ் 2023 ஆம் ஆண்டு தேசிய புத்தொழில் நிறுவனங்கள் விருதினைப் பெற்றது.
தமிழ்நாட்டின் மற்றொரு நிறுவனங்கள் நிறுவனமான அட்சுயா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், 2023 ஆம் ஆண்டிற்கான தேசியப் புத்தொழில் நிறுவனங்கள் விருதுகளில் ஆண்டின் சிறந்த ஜெனிசிஸ் (முன்னணி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்) புத்தாக்க விருதை வென்றது.