புனிதத் தோப்புகளுக்குச் சட்டப் பாதுகாப்பு – இராஜஸ்தான்
December 22 , 2024 31 days 117 0
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள புனிதத் தோப்புகள் (ஓரன்கள்) கணக்கெடுப்பு மற்றும் அறிவிப்பை நிறைவு செய்யுமாறு ராஜஸ்தான் மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராஜஸ்தானின் வனத் துறைக்கு, ஒவ்வொரு புனிதத் தோப்புக்கும் விரிவான நில சார் மற்றும் செயற்கைக்கோள் வரைபடத்தினை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.
இதில் ஓரன்கள், தேவ்-வான்கள், ருந்துகள் அல்லது அந்தந்தப் பகுதியில் அவை அறியப் படும் பெயரில் உள்ள அனைத்துத் தோப்புகள் அடங்கும்.
1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குறிப்பாக 36-C பிரிவு மூலம் ஓரன் பகுதிகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பிரிவு ஆனது ‘சமூக இருப்புக்கள்’ என்ற அறிவிப்பினை வழங்க அனுமதிக்கிறது.