TNPSC Thervupettagam

புனே: கோபால கிருஷ்ண கோகலே அருங்காட்சியகம்

July 16 , 2017 2753 days 1978 0
  • புனேவில் உள்ள கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தில் (Gokhale Institute of Politics and Economics) கோபால கிருஷ்ண கோகலேவிற்கு என்று ஒரு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட உள்ளது.
  • 1900 களின் சிறப்பு வாய்ந்த தலைவரான கோபால கிருஷ்ண கோகலே வாழ்ந்த இல்லத்திலேயே இந்த அருங்காட்சியகம் அமையவிருப்பது தான் இதன் தனிச் சிறப்பாகும்.
  • மகாத்மா காந்தியடிகள் மற்றும் மகாத்மா ஜோதிபா பூலே போன்ற பல்வேறு தேசிய தலைவர்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தனித்தனியே அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு அருங்காட்சியகங்கள் புனேவில் அமைந்துள்ளன.
  • கோபால கிருஷ்ண கோகலே
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கோகலே மிக முக்கியமான தலைவராவார். இந்திய தேசிய காங்கிரசில் (Indian National Congress - INC) உறுப்பினராக இருந்த போதிலும், 1884-இல் பட்டம் பெற்ற பின்னர் பெர்குசன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.
  • மஹாதேவ் கோவிந்த ராணடேவின் வழிகாட்டுதலின்படி, ஜூன் 12, 1905 இல் இந்திய சமூகத்தின் ஊழியர்கள் (Servants of Indian Society) என்ற இயக்கத்தினை நிறுவினார். மேலும் 1896ல் தக்காண சபையை (Deccan Sabha) நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்