புனேவில் உள்ள கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தில் (Gokhale Institute of Politics and Economics) கோபால கிருஷ்ண கோகலேவிற்கு என்று ஒரு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட உள்ளது.
1900 களின் சிறப்பு வாய்ந்த தலைவரான கோபால கிருஷ்ண கோகலே வாழ்ந்த இல்லத்திலேயே இந்த அருங்காட்சியகம் அமையவிருப்பது தான் இதன் தனிச் சிறப்பாகும்.
மகாத்மா காந்தியடிகள் மற்றும் மகாத்மா ஜோதிபா பூலே போன்ற பல்வேறு தேசிய தலைவர்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தனித்தனியே அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு அருங்காட்சியகங்கள் புனேவில் அமைந்துள்ளன.
கோபால கிருஷ்ண கோகலே
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கோகலே மிக முக்கியமான தலைவராவார். இந்திய தேசிய காங்கிரசில் (Indian National Congress - INC) உறுப்பினராக இருந்த போதிலும், 1884-இல் பட்டம் பெற்ற பின்னர் பெர்குசன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.
மஹாதேவ் கோவிந்த ராணடேவின் வழிகாட்டுதலின்படி, ஜூன் 12, 1905 இல் இந்திய சமூகத்தின் ஊழியர்கள் (Servants of Indian Society) என்ற இயக்கத்தினை நிறுவினார். மேலும் 1896ல் தக்காண சபையை (Deccan Sabha) நிறுவினார்.