TNPSC Thervupettagam
October 16 , 2019 1748 days 657 0
  • கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் மற்றும் பிரிட்டிஷ் எழுத்தாளரான பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் புக்கர் பரிசின் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இவர்கள் இந்த இலக்கிய விருதின் 50,000 பவுண்டு மதிப்பிலான நிதித் தொகையைச் சமமாகப் பிரித்துக் கொள்ள இருக்கின்றனர்.
  • புக்கர் விதிகள் இந்தப் பரிசைப் பிரிக்கக் கூடாது என்று கூறுகின்றன. ஆனால் இந்தப் பரிசின் நடுவர்கள் இந்த இரண்டு படைப்புகளையும் "பிரிக்க முடியாது" என்று வலியுறுத்தியுள்ளனர்.
  •  இது 1969 ஆம் ஆண்டு முதல் மேன் குழுமத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

பெர்னார்டின் எவரிஸ்டோ
  • புத்தகம்: சிறுமி, பெண், மற்றவை (Girl, Woman, Other).
  • புக்கர் பரிசை வென்ற ஒரே கருப்பினப்  பெண்மணி எவரிஸ்டோ ஆவார். இவருடைய வயது 60 ஆகும்.
  • இவரது புத்தகமானது நவீன கால ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் கறுப்பினப் பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின் பல்வேறு போராட்டங்களையும் ஆராய்கின்றது.
மார்கரெட் அட்வுட்
  • புத்தகம்: நற்செய்தி (The Testament).
  • 79 வயதான அட்வுட் என்பவர் தனது வாழ்க்கையின் இரண்டாவது புக்கர் பரிசினை வென்றுள்ளார்.
  • “தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்” (1985) என்ற படைப்பிற்காக இவர் ஏற்கெனவே புக்கர் விருதினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்