அக்டோபர் முதல் டிசம்பர் காலப் பகுதியானது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் புயல்கள் ஏற்படுவதற்கான உகந்த மாதங்களாக விளங்குகின்றன.
இந்த ஆண்டு அக்டோபர் மாதமானது எந்தவொரு புயலையும் சந்திக்கவில்லை.
கடல் வானிலை மாற்றங்கள் தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வங்காள விரிகுடாவில் நுழைந்து அதன் பின் இந்தியக் கடற்கரையை நோக்கி நகரும்.
இந்த ஆண்டு புயல் தீவிரமடைவதற்கான எந்தவொரு சூழ்நிலையும் ஏற்படவில்லை.
மேலும் நிலநடுக்கோட்டுப் பசிபிக் கடல் பகுதியில் வலுவற்ற லா நினா சூழ்நிலைகள் நிலவுகின்றன.
மேலும் மேடன் ஜுலியன் அலைவுகளின் (Madden Julian Oscillation - MJO) தாக்கமும் இங்கு காணப்படுகின்றது.
MJO என்பது வெப்ப மண்டலப் பகுதியின் ஊடாக கிழக்கு நோக்கி நகரும் சூறாவளி வானிலை நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
இது மழைப் பொழிவு, காற்று, கடல் மேற்பரப்பு வெப்ப நிலை மற்றும் மேகக் கூட்டம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஏறத்தாழ 80 புயல்கள் ஏற்படுகின்றன.
இதில் 5 புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் ஏற்படுகின்றன.
இவை இரண்டும் சேர்ந்து வட இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படுகின்றன.
வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் சூறாவளிகள் இயற்கையில் இரு முகட்டுத் தன்மையுடையதாக உள்ளன.
இவை ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை (பருவ மழைக்கு முன்பு) மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை (பருவ காலத்திற்குப் பின்பு) என இரண்டு காலங்களில் ஏற்படுகின்றன.