TNPSC Thervupettagam

புரதம் கொண்ட அரிசி வகை

June 21 , 2024 27 days 290 0
  • தென் கொரிய அறிவியலாளர்கள் புரதச் செல்கள் உட்செலுத்தப்பட்ட ஒரு புதிய அரிசி வகையை உருவாக்கி வருகின்றனர்.
  • இது அறநெறி முறையிலிருந்து விலகாத வகையில் பெறப்பட்ட ஒரு புரத மூலத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "மீட்டி ரைஸ்" என்று பெயரிடப்பட்ட இந்தப் புதுமையான அரிசியானது, லேசான வெண்ணெய் வாசனையைக் கொண்டுள்ளது என்பதோடு இளஞ்சிவப்பு நிறத்தினைக் கொண்டிருந்தாலும் வழக்கமான அரிசி வகையையே இது ஒத்திருக்கிறது.
  • இந்த அரிசியில் மாட்டிறைச்சியின் தசை மற்றும் அதன் கொழுப்பு செல் அணுக்கள் உட்பொதிக்கப் பட்டுள்ளது.
  • இந்த "இறைச்சி" அரிசியில் வழக்கமான அரிசியை விட எட்டு சதவிகிதம் அதிக புரதமும் ஏழு சதவிகிதம் அதிக கொழுப்பும் உள்ளது.
  • ஏற்கனவே சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் சந்தைகளில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி கிடைக்கப் பெறுகிறது.
  • இருப்பினும், இத்தாலி அரசானது தனது கால்நடைத் துறையைப் பாதுகாப்பதற்காக முந்தைய ஆண்டில் இதன் விற்பனையினைத் தடை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்